தமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா.!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 3,094 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,94,030 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 857 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,91,754 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,741 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவில் இருந்து இன்று 4,403 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 6,46,555 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தற்போது 36,734 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!
July 28, 2025