ஆலங்குடி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா..!

ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் தர்ம தங்கவேலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா காரணமாக கடந்த சில நாட்களாக மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், படுக்கைகள் உள்ளிட்ட பற்றாக்குறைகள் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் காரணமாக பொது மக்கள் முதல் முதல்வர், எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்கள் வரை அனைவரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால், பெரும்பாலான மாநிலங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் வார இறுதி ஊரடங்குகள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் தர்ம தங்கவேலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தர்ம தங்கவேல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025