தமிழகத்தில் 24 ஆயிரத்தை நெருங்கும் ஒரு நாள் கொரோனா பாதிப்பு ...!

In Tamil Nadu, 23,975 people have been affected by corona in the last 24 hours alone.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23,975 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுபடுத்தும் விதமாக தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 23,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் , 12,484 பேர் மருத்துவமனைகளிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குறிப்பாக சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 8,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.