டெல்லி சென்று நாமக்கல் திரும்பிய 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது.இதையெடுத்து இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பும் , பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனால் நாடு முழுவதும் 144 தடை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.கொரோனாவால் இந்தியாவில் தற்போது நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1834 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்ட நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, டெல்லி மாநாட்டில் பங்கேற்று நாமக்கல் திரும்பிய 18 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025