கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்.
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், இன்று (27.5.2021) தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்கள் தலைமையில், தலைமைச் செயலகத்தில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திருப்பூர், சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க, கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும், மாவட்ட ஆட்சியர்களுடன், ஒருங்கிணைந்து, கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை கண்காணிக்கவும், இம்மூன்று மாவட்டங்களுக்கும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை நியமித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு திரு.மு.அ.சித்திக், இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர் /ஆணையர், வணிகவரித் துறை அவர்களும்;
திருப்பூர் மாவட்டத்திற்கு திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., வேளாண்மைத்துறை செயலாளர் அவர்களும்;
ஈரோடு மாவட்டத்திற்கு டாக்டர் இரா.செல்வராஜ், இ.ஆ.பபு நில அளவை மற்றும் நிலவரித் திட்டஇயக்குநர் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…