சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் முதல்முறையாக நேற்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்தது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ளது. நேற்று சென்னையில் மட்டும் 804 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது. அதில், 15 மண்டலங்களில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டியுள்ளது. தொடர்ந்து ராயபுரம் மண்டலம் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. அங்கு, பாதிப்பு எண்ணிக்கை 2,737 ஆக அதிகரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,798 பேரும், திரு.வி.க. நகரில் 1,556 பேரும், தேனாம்பேட்டையில் 1,662 பேரும், தொண்டியார்பேட்டையில் 1,661 பேரும் மற்றும் அண்ணா நகரில் 1237 பேரும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் தற்போதைய பாதிப்பு எண்ணிக்கை 14802 ஆக உள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…