சிக்கன், முட்டை சாப்பிட்டால் கொரோனா? – நிரூபிப்பவர்களுக்கு ரூ.1,00,00,000 பரிசு வழங்க தயார்.!

Published by
பாலா கலியமூர்த்தி

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த வைரஸால் பொருளாதாரம், பங்கு சந்தை உள்ளிட்டவைகள் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதனிடையே கோழிக்கறி, முட்டை சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வதந்தியால், பொதுமக்கள் சிக்கன் மற்றும் முட்டைகளை தவிர்த்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் இறைச்சி கடைகளுக்கு வராததால் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளது. மேலும் கறிக்கோழி, முட்டை கொள்முதல் மற்றும் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. 

நாமக்கலில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு முட்டைகோழி பண்ணையாளர்கள் சம்மேளனத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணி, கோழிக்கறி, முட்டை சாப்பிட்டதால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக பரிசோதனை மூலம் நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என கூறினார். மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் விற்பனையாகாமல் நாமக்கலில் 15 கோடி முட்டைகள் தேங்கியுள்ளன. மேலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் 4 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து ரூ.4.50 ஆக இருந்த முட்டை விலை தற்போது ரூ.1.50 ஆக குறைந்ததற்கு வதந்தியே காரணம் என புகார் தெரிவித்தார். மேலும்  ஒரு கிலோ ரூ.90 ஆக இருந்த கறிக்கோழி வதந்திகளால் ரூ.50 ஆக குறைந்துவிட்டது என்றும் குற்றம்சாட்டினார். பின்னர் கோழிகளுக்கு கொரோனா தொற்று என தவறான கருத்துகளை பரப்பியவரை கைது செய்து நடவடிக்கை எடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி என குறிப்பிட்டார். இதனிடையே கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதையும் வாங்கிலி சுப்பிரமணி சுட்டிக்காட்டினார். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

44 minutes ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

5 hours ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

12 hours ago