சென்னையில் 100 காவல்துறையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று மட்டுமே 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை 8,002 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று மட்டுமே 538 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,371 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை என பலரும் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இவர்களுக்கு அவ்வப்போது தொற்று உறுதியாகி வருகிறது.
இதைத்தொடர்ந்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 2 துணை ஆணையர்கள், ஒரு உதவி ஆணையர் உள்பட 100 காவல்துறையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…