கோரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் நேரடியாகவோ அல்லது கூட்டமாகவோ சந்திப்புக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதால் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள கைதிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பதற்காக செல்போன் வீடியோ கால் மூலம் குடும்பத்தினரிடம் பேச அனுமதி அளித்து சிறைத் துறை டிஜிபி சுனில்குமார் சிங் தற்போது உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் தற்போது சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் பேசி வருகின்றனர். இந்த வசதியில் கைதிகள் ஏற்கெனவே அளித்துள்ள எண்களுக்கு மட்டுமே பேச முடியும். புதிதாக சிறைக்கு வந்துள்ள கைதிகள் மற்றும் ஏற்கெனவே செல்போன் எண்களை அளிக்காத நபர்கள் ஆகியோர் தற்போது தங்களது குடும்பத்தினர் 3 பேரின் எண்கள் வரை பதிவு செய்து கொள்ளலாம். இந்த வசதியின் மூலம் கைதிகள் குறைந்த பட்சம் 5 முதல் 7 நிமிடங்கள் வரை மட்டுமே பேசலாம். இந்த வசதிக்கு எவ்வித கட்டணமும் இல்லை. எந்த கைதி எந்த எண்ணில், யாருடன், எவ்வளவு நேரம் பேசியுள்ளார் என்ற பதிவேடு பராமரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…