Senthil Balaji Court custody again extended [file image]
Senthil balaji: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 32-ஆவது முறையாக நீடித்து நீதிமன்றம் உத்தரவு.
சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது. இதன்பின் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு, இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதேசமயம் ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி தாக்கல் மனுக்களை சென்னை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்த நிலையில், அதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவும் தாக்கல் செய்திருந்தார்.
இதனிடையே, இவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 32-ஆவது முறையாக மீண்டும் நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று காணொளி வாயிலாக செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஏப்ரல் 17 வரை காவல் நீட்டிக்கப்பட்டது.
அதேசமயம் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனு மீது, மீண்டும் வாதங்களை முன் வைக்க அனுமதி கேட்டு செந்தில்பாலாஜி தொடர்ந்த மனு மீது ஏப்ரல் 17ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…