பெங்களூருவில் கைதானவர்களை தமிழக கியூபிரிவு விசாரிக்க நீதிமன்றம அனுமதி.!

- பெங்களூருவில் முகமது ஹனீப்கான், இம்ரான் கான், முகமது சையது ஆகிய 3 பேரை தமிழக கியூபிரிவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கைதான 3 பேரையும் 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கியூ பிரிவு போலீசாருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம அனுமதி வழங்கிய உள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு சென்னை அம்பத்தூரில் திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் சையதுஅலி , காஜாமொய்தீன் ,அப்துல் சமீம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானார்கள். தலைமறைவான 3 பேரையும் கண்டுபிடிக்க உதவி செய்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் அவர்களின் புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டனர்.
இந்நிலையில் இவர்களுக்கு உதவி செய்ததாக பெங்களூருவில் முகமது ஹனீப்கான், இம்ரான் கான், முகமது சையது ஆகிய 3 பேரை தமிழக கியூபிரிவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவர்கள் தலைமறைவானவர்களுக்கு செல்போன் மற்றும் சிம்கார்டுகளை வாங்கி கொடுத்த வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பெங்களூருவில் கைதான 3 பேரையும் 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கியூ பிரிவு போலீசாருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கிய உள்ளது. இவர்களுக்கு பல்வேறு அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்ததாக காவல்துறை குற்றச்சாட்டு முன் வைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025