திமுகவுடன் மீண்டும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சிபிஐ.!

விருப்பமான தொகுதிகள் கிடைக்காத நிலையில், ஒரே நாளில் 2வது முறையாக திமுகவுடன் சிபிஐ பேச்சுவார்த்தை.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கடந்த ஒரு வாரமாக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்பின் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது குறித்து இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடைபெற்றது. அப்போது தொகுதி ஒதுக்கீடு இழுபறியில் இருந்ததால் பட்டியல் நாளை வெளியாகும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்பதை குறித்து திமுக – சிபிஐ பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் சில விருப்பமான தொகுதிகளை கேட்டுசிபிஐ குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
திருத்துறைப்பூண்டி, தளி போன்ற விருப்பமான தொகுதிகள் கிடைக்காத நிலையில், ஒரே நாளில் 2வது முறையாக திமுகவுடன் சிபிஐ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் சுலபமான முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025