கூட்டணிக்கு ஒதுக்க கூடாது..,கோவையில் அதிமுகவினர்.., அறந்தாங்கியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு கூடாது என திமுகவினர் ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதால் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு கோவை தெற்கு தொகுதியை ஒதுக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனால், பாஜகவிற்கு கோவை தெற்கு தொகுதியை ஒதுக்ககூடாது எனவும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனனுக்கு ஒதுக்க வேண்டும் என கூறி கோவை அதிமுக அலுவலகத்தில் அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கபடுவதாக தகவல் வந்த நிலையில், திமுகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் 50-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்துள்ளனர்.
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்டது. இந்த இரண்டு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. இந்த முறை திமுக போட்டியிட வேண்டுமென திமுகவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025