எழுந்த கண்டனங்கள்.. யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
பொங்கல் திருநாளில் அறிவிக்கப்பட்டிருந்த நெட் தேர்விற்கு எதிராக கண்டனங்கள் எழுந்த நிலையில், நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு நடத்தப்படும் என அறிவித்து இருந்தது. இதனையடுத்து, பொங்கல் தினத்தன்று தேர்வா? என சில மாணவர்கள் அதிர்ச்சியடைந்ததை போல அரசியல் தலைவர்களுமே அதிர்ச்சியடைந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறிப்பாக, சு.வெங்கடேசன் எம்.பி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தேர்வு தேதியை தள்ளிவைக்கவேண்டும் பொங்கல் தேதியில் தேர்வு நடக்க கூடாது என எதிர்ப்புகளை தெரிவித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வுகளை நடத்தக் கூடாது என மத்திய கல்விதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் கூட சமீபத்தில் எழுதியிருந்தார்.
இதனையடுத்து, பொங்கல் திருநாளில் அறிவிக்கப்பட்டிருந்த நெட் தேர்விற்கு எதிராக கண்டனங்கள் எழுந்த நிலையில், நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜனவரி 15, 2025 அன்று பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் பிற பண்டிகைகளை முன்னிட்டு UGC – NET டிசம்பர் 2024 தேர்வை ஒத்திவைக்க வேண்டுகோள் வந்தது.
ஆர்வலர்களின் நலனுக்காக, ஜனவரி 15, 2025 அன்று திட்டமிடப்பட்டிருந்த UGC-NET டிசம்பர் 2024 தேர்வை மட்டும் ஒத்திவைக்க தேசிய தேர்வு முகமை (NTA) முடிவு செய்துள்ளது. புதிய தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஜனவரி 16, 2025 அன்று திட்டமிடப்பட்ட தேர்வு முந்தைய அட்டவணையின்படி நடத்தப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
UGC NET December 2024
Postponed exam schedule on 15 jan .#ugcnet #ugcnetdecember pic.twitter.com/tarSZlTRde— Deepak (@Deepak34564724) January 13, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி கொள்கை விவகாரம் முதல்…டெல்லி நிலநடுக்கம் வரை!
February 17, 2025
சோலி முடிஞ்சு.. ரிஷப் பண்ட்டை பதம் பார்த்த ஹர்திக் பாண்டியா பந்து.!
February 17, 2025
மஜாபா..மஜாபா! ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம்! மதராஸி குட்டி டீசர் இதோ!
February 17, 2025
டெல்லியைத் தொடர்ந்து பீகாரிலும் மிதமான நிலநடுக்கம்!
February 17, 2025
வார தொடக்க நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு.!
February 17, 2025
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் – மூன்றாவது விமானம் இந்தியா வந்தடைந்தது.!
February 17, 2025
ஐபிஎல் 2025 : மும்பை இந்தியன்ஸ் அட்டவணை இதோ!
February 17, 2025