ஊரடங்கு மீறல் – ரூ.2.68 கோடி அபராதம் வசூல்.!

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 2,85,150 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு – தமிழக காவல்துறை
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு காவல்துறை வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 2,85,150 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை 2,68,537 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மேலும் வெளியே சுற்றிய 2,39,770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.2.68 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025