தொடரும் விலங்குகள் மரணம்! 6 மாதத்தில் 14 யானைகள் உயிரிழப்பு!

கோவையில் கடந்த 6 மாதத்திற்குள், 14 யானைகள் உயிரிழந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே விலங்குகளின் மரணம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கோவையில் கடந்த 6 மாதத்திற்குள், 14 யானைகள் உயிரிழந்துள்ளது. இதனையடுத்து, வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், வன ஆர்வலர்கள் கொண்ட கமிட்டி இதுகுறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாக, மண்டல தலைமை உதவி வனப்பாதுகாவலர் தெபசிஸ் ஜனா தெரிவித்துள்ளார்.
கோவையில் இதுகுறித்து அவர் பேசுகையில், இந்த குழு 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என்றும், யானைகள் மரணம் தொடர்பாக இந்த குழு அறிவியல் பூர்வமாக ஆய்வு நடத்தும் என்றும், யானைகளின் மரணம் தொடர்பாக தவறான பிரச்சாரம் செய்யப்படுவதாகவும், ஒரே ஒரு யானை மட்டுமே இயற்கைக்கு மாறான மரணம் அடைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025