செப்டம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்த முடிவு ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், செப்.1ம் தேதி முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகள் திறக்க அரசு திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால், பள்ளிகள் திறப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், பள்ளிகளை திறக்கும் பட்சத்தில் கட்டாயம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும். நாளொன்றுக்கு 50% மாணவர்கள் மட்டும் பள்ளியில் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த ஆலோசனை நடத்தி வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…