பாமக 35ஆம் ஆண்டு விழா நடத்த அனுமதி மறுப்பு.! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

PMK Leader Anbumani Ramadoss - Madras High court

பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தொடங்கி 35 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து அதனை விழாவாக நடத்த கடலூரில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  இந்த பொதுக்கூட்டம் நாளை நெய்வேலி அருகே வடலூர் பேருந்து நிலைய சந்திப்புக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்கு அனுமதி கேட்டு கடலூர் மாவட்ட காவல்துறையிடம் பாமக கோரிக்கை வைத்து இருந்து. ஏற்கனவே, நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே பாமக போராட்டம் நடத்தி அதன் பின்னர் அது வன்முறையாக மாறிய காரணத்தால், நெய்வேலி டிஎஸ்பி பாமக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டார்.

இதனை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் கடலூர் மாவட்டத்தில் வடலூர் பேருந்து நிலைய சந்திப்புக்கு அருகே பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தலைமையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணையில், கட்சி கூட்டத்தை நடத்துவது அவர்களின் உரிமை என்றாலும், அதில் காவல்துறை அச்சத்தை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்க முடியாது என்றும். இதனால், கடலூரில் பாமக கூட்டத்தை அனுமதிக்க முடியாது என்றும் வேறு மாவட்டங்களில் வேண்டுமென்றால் காவல்துறை அனுமதியுடன் நடத்த அனுமதி என்றும் உத்தரவிட்டது. கடலூரை தவிர்த்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொள்ளவும் உயர்நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கு பாமக மறுப்பு தெரிவித்தது. கடலூரை தவிர வேறு இடங்களில் நடத்த அனுமதி கோரப்போவதில்லை என்றும் மேல்முறையீடு செய்ய மீண்டும் நீதிமன்றம் செல்வோம் என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha