காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது – வானிலை ஆய்வு மையம்!

According to the Meteorological Department, the depression is likely to develop in the southern Andaman region.

தெற்கு அந்தமான் பகுதியில் உருவாக்கவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பருவமழை காரணமாக தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை மேற்கு வடமேற்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் எனவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்தமான் அருகே உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் ஒன்றாம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.