மு.க.ஸ்டாலின் குறித்து இகழ்ந்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து வசைபாடியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து புகழ்ந்தும், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதனை கண்டித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், பெயரோ, முகவரியோ வெளியிட தெம்பில்லாத தில்லுமுல்லு பேர்வழிகளால் சிலசுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. ஒருபக்கம் எடப்பாடியை புகழும் வாசகங்கள், இன்னொரு பக்கம் என்னை இகழ்ந்தும் வாசகங்கள். என்னை விமர்சிப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், விமர்சனம் ஆரோக்கியமானதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் இருக்க வேண்டும்.
முகவரியற்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டால், தடுக்க வேண்டிய கடமை அரசுக்கும், காவல்துறைக்கும் உள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சுவரொட்டிகளை திமுக தொண்டர்கள் கிழித்து வருகிறார்கள். அச்செயலில் ஈடுபட வேண்டாம். ஒட்டுகிறவர்கள் அனைவரையும், பொதுமக்கள் ஒட்டு மொத்தமாக ஓட, ஓட விரட்டியடிக்க போகிறார்கள்.
கொரோனாவில் தோல்வி, தமிழக மாணவர்களின் கல்வி வாய்ப்பை காப்பாற்ற, மாநில உரிமைகளை பெற முடியாத கொள்ளை கூட்டம். அர்த்த ராத்திரியில், அநாமதேய சுவரொட்டிகளை ஒட்டும் முயற்சி தொடருமானால், தமிழ் மக்கள் மன்றம் வழங்க போகும் கடும் ஆயுள் தண்டனை வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…