மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 03) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், தேர்தல் பணிகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து முடிவுகள் எடுக்கப்படலாம்.

சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 03) அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் காலை 10:30 மணியளவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், இந்தக் கூட்டம் குறித்து முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த கூட்டத்தில், அனைத்து திமுக மாவட்டச் செயலாளர்களும் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கிய முடிவுகள், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள், மற்றும் கட்சி அமைப்பு பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், மதுரையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள திமுக பொதுக்குழு தொடர்பாக ஆலோசனை செய்ய வாய்ப்பு உள்ளது.முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வருவதாகவும், 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறிவருகிறார்.
இதற்கிடையில், பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025