கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சி பகுதியில் வேலை பார்த்து வரும் 36 துப்புரவு தொழிலாளர்களுக்கு அப்பகுதி திமுகவினர் பாத பூஜை செய்து கௌரவித்தனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதில்லை. மருத்துவர்கள், காவலர்கள் , துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் தினமும் கொரோனாவுக்கு எதிரான தனது வேலையை செவ்வனே செய்துவருகின்றனர்.
தினமும் சாலை, தெருவோரங்களில் இருக்கும் குப்பைகளை அகற்றி ஊரை சுத்தமாக வைத்து நோய் வருமுன் மக்களை காக்க துப்புரவு தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றனர்.
இவர்களை கௌரவிக்கும் வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சி பகுதியில் வேலை பார்த்து வரும் 36 துப்புரவு தொழிலாளர்களுக்கு அப்பகுதி திமுகவினர் பாத பூஜை செய்து கௌரவித்தனர். திமுகவினரின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுவருகிறது.
பாத பூஜையை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் பிரியாணி பரிமாறப்பட்டது. பின்னர், அவர்களுக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர் தங்கவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு, மாவட்டக்குழு உறுப்பினர் கற்பனைச்செல்வம் மேலும், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…