கொரோனா தடுப்பூசி பற்றாக்குறைக்கு திமுகதான் காரணம் என மாநில பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வடபழனி முருகன் கோவிலில் மாநில பாஜக தலைவர் எல்.முருகன் வழிபாடு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் இன்னும் கொரோனா முடியவில்லை, நாம் இன்னும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். முககவசம் கட்டாயமாக அணிய வேண்டும்.
சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அனைவரும் கட்டாயமாக தடுப்பூசியை நாம் அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் இந்த கொரோனாவை வெல்ல முடியும். ஆகையால் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்வோம். இன்றைக்கு தளர்வுகள் வந்துடுச்சுனு கொரோனா முடிந்ததாக நாம் யாருமே அர்த்தம் கொள்ள வேண்டாம் என்பதே என்னுடைய கருத்து.
வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள். தமிழக அரசு மத்திய அரசாங்கத்தில் இருந்து எவ்வளவு தடுப்பூசி வாங்கியிருக்கிறீர்கள்..? எந்த மாவட்டத்தில் எவ்வளவு தடுப்பூசி கொடுத்திருக்கிறீர்கள்..? எந்தெந்த இடத்தில் எவ்வளவு தடுப்பூசி போட்டு இருக்கீங்க..? எவ்வளவு தடுப்பூசி போடாமல் வீண் செய்து இருக்கீங்க..? தடுப்பூசி ஆனது இந்த மாதம் மட்டும் 42 லட்சம் தடுப்பூசி தமிழக அரசுக்கு கொடுத்து இருக்கிறோம். தடுப்பூசி பற்றாக்குறைக்கு திமுக தான் காரணம் என தெரிவித்தார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…