திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை தூண்டி விடுவதாக விளம்பரத்துறை அமைச்சர் பேச்சு.!

- தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றிய பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்கு சேகரித்தார்.
- அப்போது குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பது போல் மக்களை தூண்டி விடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றிய பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்கு சேகரித்து வந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்கு பயந்து திமுக தலைவர் ஸ்டாலின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பது போல் மக்களை தூண்டி விடுவதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025