2019 தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் திமுக எம்.பி கனிமொழி வெற்றி.!

கனிமொழியின் வெற்றியை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
தூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றியை எதிர்த்து அத்தொகுதியை சேர்ந்த சந்தான குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிற்கு தடை கோரி கனிமொழி தொடர்ந்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம். அதன்படி, கனிமொழி மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது.
அதாவது, கடந்த 2019 தேர்தலில் திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றியை ரத்து செய்யக்கோரி சந்தானகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் தூத்துக்குடி எம்பி கனிமொழி வெற்றி பெற்றுள்ளார்.