வறுமையால் பூவிற்ற பள்ளி குழந்தைகளுக்காக 1 லட்சத்துக்கும் மேல் நிதி திரட்டிய தி.மு.க எம்.பி!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வறுமையால் பூவிற்ற பள்ளிக்குழந்தைகளுக்காக 1லட்சம் நிதி திரட்டி கொடுத்துள்ள திமுக எம்பிக்கு குவியும் பாராட்டுக்கள்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மருதமலை சாலையில் சபீர் என்பவர் தனது மகன் மற்றும் மகளுடன் இணைந்து தனது பூ விற்கும் தொழிலை நடத்தி வந்துள்ளார். இவர் பூவை எடுத்துக் கொடுக்க குழந்தைகள் சாலையோரம் செல்லும் வாகன ஓட்டிகளிடம் சென்று பூக்களை விற்று வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடந்தாலும் எப்படி கல்விக் கட்டணம் செலுத்துவது என வழி தெரியாமல், வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்வதற்காகவும் பூக்களை விற்கிறோம் என அவரது தந்தை கவலையுடன் தெரிவித்துள்ளார்.இந்த செய்தி ஊடகங்களில் பரவலாக வெளியாகியது.
இதனை தொடர்ந்து தர்மபுரி திமுக எம்பி செந்தில் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் சிறுவர்களின் படிப்புக்காக அவரது தந்தையின் வங்கி கணக்கில் முடிந்தவர்கள் ஆயிரம் ரூபாய் செலுத்துமாறு நிதி திரட்டினார். அவரது கோரிக்கையை ஏற்று பலர் நிதி கொடுத்துள்ளனர். அவர் வைத்திருந்த இலக்கு 80,000 தாண்டி ஒரு லட்சம் வரை நிதி திரண்டுள்ளதால் தற்பொழுது அந்த குழந்தைகளின் கல்விச் செலவுக்கு அவரது தந்தையிடம் கொடுத்துள்ளார். இவரது இந்த செயல் பல அமைச்சர்கள் மற்றும் சமூக வாதிகளின் பாராட்டை பெற்றுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025