தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு பிரகாசமாக உள்ளது என்று ஏபிபி மற்றும் சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது .
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தில் ஒரு கட்சி மற்ற கட்சியை மாறிமாறி குற்றம்சாட்டி வருவதோடு, விமர்சித்தும் வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில், பல கட்சிகள் இருந்தாலும் அதிமுக மற்றும் திமுக இடையிலான போட்டி குறித்து தான் இன்று பல இடங்களில் பேசப்பட்டு வருகிறது இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு பிரகாசமாக உள்ளது என்று ஏபிபி மற்றும் சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது .
அந்த கருத்துக் கணிப்பின்படி, திமுக தலைமையிலான கூட்டணி 43 சதவீத வாக்குகளைப் பெற்று 161 முதல் 169 தொகுதிகளில் வெற்றிபெறும். அதிமுக தலைமையிலான கூட்டணி 30.6 சதவீத வாக்குகளுடன் 53 முதல் 61 தொகுதிகளில் வெற்றி பெறும். மக்கள் நீதி மையம் 7 சதவீத வாக்குகளைப் பெற்று, இரண்டு முதல் ஆறு இடங்களிலும், அமமுக 6.4 சதவீத வாக்குகளுடன் 1 முதல் 5 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற கட்சிகள் 12.3 சதவீதம் வாக்குகள் மூன்று முதல் ஏழு இடங்களில் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…