ஃபெஞ்சல் புயல் எதிரொலி : “வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்”..செங்கல்பட்டு ஆட்சியர் அறிவுறுத்தல்!

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

cyclone Chengalpattu

சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள  ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறாவளி புயலாக, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கடக்க வாய்ப்புள்ளது

புயல் கரையை கடக்கும்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை உள்ளிட்ட வட தமிழ் மாவட்டங்கள் புதுவை கடற்கரை பகுதிகளில் தரைக்காற்று 70-80 கிமீ சில நேரம் 90 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும், மேற்கண்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் அதி கனமழை இன்று இரவு முதல் நாளை பெய்யும். காற்றின் வேகம் 60-70 கி.மீ இருக்கும் வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஆபத்தை உணராமல் பொதுமக்கள்  பலரும் கடல் மற்றும் தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களுக்கு சென்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். இந்த சூழலில், வேலூர்  மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று  அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

ஆறு, ஏரி, குளங்கள் போன்ற ஆழமான நீர் நிலைகள் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். அத்தியாவசியமாக எதாவது பொருட்கள் வாங்கவேண்டும் என்றால் மட்டுமே வெளியே செல்லுங்கள். புயல் கரையைக் கடக்கும்போது 50-60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் வெளியே வர வேண்டாம். நாளை நடக்க இருந்த தீவிர தூய்மை பணி, கொசு ஒழிப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.” எனவும் வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி  கேட்டுக்கொண்டுள்ளார்.

அதே போலவே, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரும் பொது மக்கள் தங்களுடைய வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தது புகார்கள் எதுவும் தெரிவிக்கவேண்டும் என்றால் 9444272345 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார். அது மட்டுமின்றி, இயற்கை இடர்பாடுகள் குறித்த புகார்களுக்கு 1077, 044-27427412, 27427414 எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனவும் அதற்கான எண்களை வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்