தொடர்ச்சியாக காய்ச்சல் இருக்கா?உடனே ரத்த பரிசோதனை செய்யுங்கள்-அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்

தொடர்ச்சியாக காய்ச்சல் இருந்தால் ரத்த பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று 100-க்கும் மேற்பட்டவர்கள் கடும் காய்ச்சலால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது வரை 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில் இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில்,டெங்குவால் இறப்பு இல்லாத நிலையை உருவாக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம் . டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.தொடர்ச்சியாக காய்ச்சல் இருந்தால் ரத்த பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025