மருத்துவப்பணியின் முக்கியத்துவம் கருதி அரசு மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும்-மு.க.ஸ்டாலின்

மருத்துவப்பணியின் முக்கியத்துவம் கருதி அரசு மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
‘சிறப்பு குறை தீர்க்கும் முகாம்கள்’ நடத்தி – மக்கள் குறைகளை தீர்க்கப் போகிறோம் என புது வேடமணிந்திருக்கும் முதலமைச்சர் அவர்கள், ‘குறைகளை தீர்த்து வையுங்கள்’ என போராட்டம் நடத்திவரும் அரசு மருத்துவர்களை உடனடியாக அழைத்துப் பேசி, அவர்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்றவும்! pic.twitter.com/d8LXqjnZxC
— M.K.Stalin (@mkstalin) August 27, 2019
பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த வகையில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,சிறப்பு குறை தீர்க்கும் முகாம்கள்’ நடத்தி மக்கள் குறைகளை தீர்க்கப் போகிறோம் என புது வேடமணிந்திருக்கும் முதலமைச்சர் அவர்கள், குறைகளை தீர்த்து வையுங்கள் என போராட்டம் நடத்திவரும் அரசு மருத்துவர்களை உடனடியாக அழைத்துப் பேசி, அவர்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும். மருத்துவப்பணியின் முக்கியத்துவம் கருதி அரசு மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025