இன்று மருத்துவர்கள், நாளை ஒட்டுமொத்த 8 கோடி தமிழர்களுக்கும் இந்த அவமானம் – ஜோதிமணி கடிதம்

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழக மருத்துவர்களை இந்தி தெரியாவிட்டால் வெளியேறுங்கள் என்று கூறியது கண்டனத்துக்குரியது என ஆயுஷ் அமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடிதம்.

இந்தி தெரியவில்லையென்றால், கூட்டத்தைவிட்டு வெளியேறுங்கள் என்று ஆயுஷ் அமைப்பின் செயலர் ராஜேஷ் கோட்சே கூறியிருப்பது கண்டத்துக்குரியது என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மத்திய ஆயுஷ் அமைச்சர், ஸ்ரீபட் நாயக்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தமிழக ஆயுஷ் மருத்துவர்கள் கலந்து கொண்ட தங்கள் துறை சார்ந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இந்தி மொழியைப் தெரியாவிட்டால் வெளியேறுங்கள் என்று கூறப்பட்ட சம்பவத்தை மிகுந்த துயரத்துடன் தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். அதுவும், ஆயுஷ் துறையின் செயலாளரே இவ்வாறு பேசியிருப்பது வருந்தத்தக்கது என கூறியுள்ளார்.

இந்தி பேசாத மருத்துவர்களிடம் மொழித் திணிப்பைச் செய்வது ஏன் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. முதலில் தமிழ்நாடு எந்த இந்திய மொழிக்கும் எதிரானது இல்லை என்பதைப் பதிவுசெய்ய விரும்புகிறேன். ஆனால், எந்தவிதமான வகையிலும், எந்த மொழியையும் எங்கள்மீது திணிப்பதையும் கடுமையாக எதிர்ப்போம். மேலும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறும்படியான ஆயுஷ் செயலாளரின் நடவடிக்கை, எனக்கு உருவாக்கியிருக்கும் ஏமாற்றத்தையும், அதற்கு எதிரான எனது கடுமையான கண்டனத்தையும் தெரிவிக்கவே இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இன்று மருத்துவர்களுக்கு என்று விட்டுவிட்டால், நாளை ஒட்டுமொத்த 8 கோடி தமிழர்களுக்கும் இந்த அவமானம் ஏற்படுத்தப்படும். அதனால், இத்தகைய சர்ச்சைகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அமைச்சகத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜோதிமணி, தமிழக மருத்துவர்கள் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலரால் ஹிந்தி தெரியாவிட்டால் வெளியேறுங்கள் என்று அவமதிக்கப்படுகின்றனர். தமிழகமே கொந்தளிக்கிறது. தமிழக முதல்வர் வாய் மூடி மௌனம் காக்கிறார். இது தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் இழைக்கப்பட்ட அவமானம் அல்லவா? இந்த அடிமை ஆட்சியால் என்ன பயன்? என கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

LSG vs SRH : பேட்டிங்கில் மிரட்டிய லக்னோ.., ஹைதராபாத்துக்கு இமாலய இலக்கு.!

லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…

1 hour ago

”விஷாலுடன் ஆகஸ்டு 29 ஆம் தேதி திருமணம்” – மேடையில் அறிவித்த சாய் தன்ஷிகா.!

சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…

1 hour ago

சாய் தன்ஷிகாவை கரம் பிடிக்கும் நடிகர் விஷால்.! மேடையில் போட்டுடைத்த இயக்குநர்.!

சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…

2 hours ago

தாக்குதலில் இந்தியாவின் விமானங்கள் எத்தனை சேதமடைந்தன? விக்ரம் மிஸ்ரி கூறியது என்ன?

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…

3 hours ago

LSG vs SRH : லக்னோவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு.? ஹைதராபாத் அணி பந்துவீச்சு.!

லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…

3 hours ago

“சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு”- முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு.!

சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…

4 hours ago