திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீதி ஜூன் 10 ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம். ஏற்கனவே மே 29 ஆம் தேதி வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் தங்களுக்கு எதிரான வன்கொடுமை தடைச்சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மேலும் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறநின் மனுக்களை அவசர வழக்காக பிற்பகலில் நீதிபதி நிர்மல்குமார் விசாரணை மேற்கொள்கிறார் என்று கூறப்பட்டது. திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகிய இருவர் மீது மே 29 வரை எந்தவித கடுமையான நடவடிக்கைளும் எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று கோவை வெரைட்டி ஹால் காவல் நிலையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை மே 29 ஆம் தேதி ஒத்திவைத்து. இதையடுத்து, இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீதி ஜூன் 10 ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று வழக்கை அதுவரை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…
சென்னை : தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும் ஜூலையில் நிறைவடைய இருக்கும் நிலையில், அடுத்த தேர்தல்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பா.ம.க.வில் வெடித்துள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. ராமதாஸ்…
கர்நாடகா : 'தக் லைஃப்' திரைப்பட நிகழ்ச்சியில் கமலின் கருத்துகள் கடும் எதிர்ப்புகளை பெற்று வருகிறது. அதாவது, சென்னையில் அண்மையில் நடைபெற்ற…