சீர்காழியில் இரட்டை கொலை..! 15 கிலோ தங்க நகை கொள்ளை..!

Early this morning, a gang of 4 people entered Tanraj's house and looted 15 kg of gold jewelery from the house.

பூம்புகார் அருகே தருமகுளத்தில் தன்ராஜ் என்பவர் நகை அடகு கடை வைத்துள்ளார். இன்று அதிகாலை தன்ராஜ் வீட்டில் 4 பேர் கொண்ட கும்பல் நுழைந்து வீட்டில் இருந்த 15 கிலோ தங்கம் நகையை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தின் போது தன்ராஜ் என் மனைவி ஆஷா (45),அவரது மகன் அகில் (25) ஆகிய இருவரையும் கழுத்தறுத்து கொன்று விட்டு நகைகளுடன் தப்பியது கொள்ளை கும்பல்.

அடகு கடை உரிமையாளர் தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் ஆகியோருக்கு கொள்ளையர்கள் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில், சீர்காழி போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். சிசிடிவி கேமராவை எடுத்து 8 கோடி மதிப்புள்ள நகையுடன் தப்பி சென்ற வடமாநில கொள்ளை கும்பலை குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.