அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை – சென்னை வானிலை ஆய்வு மையம்

Chennai Meteorological Department has forecast dry weather in Tamil Nadu for the next 4 days.Light rain is also expected in some districts.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்சும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ்சும் கொண்டிருக்கும்.

மேலும், அடுத்த 24 மணி நேரத்துக்கு மாலத்தீவு, அதனை ஓட்டியுள்ள தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.