இன்று முதல் தொழிற்சாலை வாகனங்களுக்கு இ – பதிவு கட்டாயம் – தமிழக அரசு!

From today, the Tamil Nadu government has ordered that e-registration be mandatory for vehicles that can take employees to the factory.

இன்று முதல் தொழிற்சாலைக்கு பணியாளர்களை அழைத்துச் செல்லக்கூடிய வாகனங்களுக்கு இ பதிவு கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கின் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க கூடிய கடைகள் கூட திறக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்க கூடிய ஆலைகள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், இன்று முதல் தொழிற்சாலைக்கு பணியாளர்களை அழைத்து செல்லக்கூடிய வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று முதல் தொழிற்சாலைப் பணியாளர்கள் இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது எனவும், இதன் காரணமாக தொழிலாளர்கள் அழைத்து வருவதற்கு நான்கு சக்கர வாகனங்களை தொழிற்சாலை நிறுவனங்கள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.