தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியினருடன் கமல்ஹாசன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் ஆம் ஆத்மி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் – ஆம் ஆத்மி கட்சி கூட்டணி பங்கீடு குறித்து கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை தொடங்கியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன. அதிமுக, திமுக அணிகளில் இதுவரை கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு முடியவில்லை. ஆனாலும், இரு பிரதான கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதனிடையே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி சேருவாரா அல்லது தனித்து போட்டியிடுவாரா என்ற எதிரிபார்ப்பு நிலவி வரும் நிலையில், ஆம் ஆத்மியுடன் கூட்டணியில் சேர அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இன்று ஆலோசனையும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…