இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று மாலை வெளியிட அதிமுக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி முதல் அதிமுக விருப்ப மனுக்களை வழங்க தொடங்கி, மார்ச் 3ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிட சுமார் 8,000 பேர் விருப்ப மனு அளித்திருந்த நிலையில், ஒரே நாளில் நேர்காணலை அதிமுக முடித்திருந்தது. இதன்பின் கடந்த 5ம் தேதி அதிமுக சார்பில் முதற்கட்டமாக 6 தொகுதிகளில் போட்டியிடம் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில், எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி, தேனி மாவட்டம் போடியில் ஓ.பன்னீர்செல்வம், ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரத்தில் சி.வி சண்முகமும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் தொகுதியில் சண்முகநாதன், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் தேன்மொழி போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று மாலை வெளியிட அதிமுக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்வதில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று மாலை வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…