, ,

வேலைவாய்ப்பு : கோவை மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..! மிஸ் பண்ணிராதீங்க மக்களே..!

By

கோவை சுகாதாரத் துறையில் பணிபுரிய தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார குழுமத்தில், செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் மூலம் District Quality Consultant-1, IT Co-ordinator (L.IMS)-1, Biock Account Assistant- 1, Labour Mobile Medical Unit Driver-1, Labour Mobile Medical attender cum cleaner-1, போன்ற பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொாகுப்பூதியத்தில் மாவட்ட நல சங்கம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை கோவை மாவட்ட இணையதள முகவரி https://coimbatorenicitn -லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது பந்தய சாலையில் உள்ள துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் அறிந்து கொள்ளலாம்.

மேற்கனண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் உரிய விண்ணப்பங்களை 16.12.2021அன்று மாலை 5 மணிக்குள் பந்தய சாலையில் உள்ள துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம். மேற்படி, பணிகளுக்கான நேர்முக தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinasuvadu Media @2023