EnMannEnMakkal : 2ம் கட்ட நடைப்பயணத்தை தொடங்கினார் அண்ணாமலை!

2024-ஆம் ஆண்டில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே அமைய வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் முதற்கட்ட பாதயாத்திரை மேற்கொண்டார். ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த முதல்கட்ட ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்களை கடந்து 22ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் தனது நடைபயணத்தை நிறைவு செய்தார்.
இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தின் 2ம் கட்டத்தை தற்போது துவங்கினார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தின் 2ம் கட்டம் துவங்கியுள்ளது. அதன்படி, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லுார், தேனி, திண்டுக்கல், திருப்பூர். கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் செப்டம்பர் 28ம் தேதி வரை என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார் அண்ணாமலை.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025