US VISA : அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் 1 லட்சம் குழந்தைகள்.? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.!

Childrens in USA

அமெரிக்க வாழ் இந்தியர்கள், பெரும்பாலும் H1B விசா வைத்து வேலை செய்து வருகின்றனர். இவர்களில் தம்பதிகளாக விசா பெற்று இந்தியாவில் இருந்து தங்கள் குழந்தைகளுடன் குடியேறிவர்கள் குழந்தைக்கு H4 விசா வழங்கப்படும். இது பற்றிய ஓர் அதிர்ச்சி ஆய்வறிக்கையை அமெரிக்க அமைப்பு வெளியிட்டுள்ளது

கேட்டோ இன்ஸ்டிடியூட்டில் குடியேற்ற ஆய்வு நிபுணர் டேவிட் ஜே பியர் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் குறிப்பிடுகையில், லட்சக்கணக்கான இந்திய குழந்தைகள் தாயகம் திரும்பும் அபாயம் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் வேலை செய்யும் 10.7 லட்ச இந்தியர்கள் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையான கிரீன் கார்டு கோரி  விண்ணப்பித்துள்ளனர்.

அமெரிக்க விசா விதிப்படி அவர்களுக்கு வரிசையாக விசா வழங்கி முடிக்கவே 135 ஆண்டுகள் ஆகிவிடும். பல்வேறு காரணங்கள் கொண்டு வேகமாக விசா கொடுக்கப்பட்டாலும் அமெரிக்க விதிப்படி 54 ஆண்டுகள் ஆகிவிடும். அப்படி கணக்கிட்டால், நிரந்தர விசா கோரி விண்ணப்பித்து இருந்தவர்களில் தம்பதியினரின் குழந்தைகளுக்கு வயதாகிவிடும்.

H1B விசா வைத்து இருப்பவர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் H4 விசாவானது இதுவரை 1.34 லட்ச குழந்தைகளுக்கு   வழங்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைகளுக்கு 21 வயது ஆகும் வரை மட்டுமே அந்த விசா செல்லுபடியாகும். அப்படி பார்த்தால் அவர்களுக்கு 21 வயது ஆகும் போது அந்த ‘வளர்ந்த’ குழந்தைகளான அவர்கள் ஒன்று F1 எனப்படும் மமாணவர் விசா வைத்து இருக்க வேண்டும், அல்லது தொழிலாளர் விசா எனப்படும் EAD விசா வைத்து இருக்க வேண்டும்.

இது இரண்டும் பெறுவது அவ்வளவு எளிதல்ல. மாணவர் விசா வருடத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வழங்கப்படும். அதுவே , தொழிலாளர் விசா பெறுவது கடினமான ஒன்று. இப்படி இருக்கையில் அவர்கள் அமெரிக்காவில் உள்ள பெற்றோர்களை பிரிந்து சொந்த நாட்டிற்கு தான்  அனுப்பப்படுவர் என கூறுகிறது கேட்டோ இன்ஸ்டிடியூட்டில் குடியேற்ற ஆய்வறிக்கை. இதன் காரணமாகவே சுமார் 1 லட்சம் குழந்தைகள் இந்தியா திரும்ப வாய்ப்பு இருப்பதாக மேற்கண்ட ஆய்வறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்