வாரத்தின் முதல் நாளான இன்று 65,525 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில், 240.98 புள்ளிகள் உயர்ந்து 65,628.14 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 93.50 புள்ளிகள் உயர்ந்து 19,528.80 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65,387 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,435 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.
இதற்கு முன்னதாக, சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
