#BREAKING: மாணவர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ஈபிஎஸ்..!

எடப்பாடி பழனிசாமி உயிரிழந்த மாணவர் தனுஷின் உடலுக்கு நேரில் சென்று மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தை சார்ந்த தனுஷ் 2 முறை நீட் தேர்வு எழுதி இரண்டு முறையும் தேர்வில் தோல்வியுற்ற நிலையில், மூன்றாவது முறையாக இன்று நீட் தேர்வு எழுத இருந்தார்.
இதனால், மீண்டும் தேர்வில் தோல்வியடைந்துவிடுமோ என்ற பயத்தில் தனுஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த மாணவரின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி உயிரிழந்த மாணவர் தனுஷின் வீட்டிற்கு நேரில் சென்று மாணவரின் உடலுக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025