மக்கள் என்னை தூக்கி எறிந்தாலும், சுவற்றில் அடித்த பந்து போல மீண்டும் மக்களுக்கு சேவை செய்வேன் என்று விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், தன்னை யாரும் நேரில் சந்தித்து வாழ்த்து கூற வேண்டாம் என்றும், தனது பிறந்தநாளில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை, தேமுதிகவினர் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடுகின்றனர். இதனையடுத்து, திருப்பூரில் நேற்று நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட, விஜயகாந்தின் மூத்தமகன் விஜயபிரபாகரன், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் பேசிய அவர், மக்கள் என்னை தூக்கி எறிந்தாலும், சுவற்றில் அடித்த பந்து போல மீண்டும் மக்களுக்கு சேவை செய்வேன் என்றும், விஜயகாந்த் நலமாக உள்ளதாகவும், விரைவில் வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு செல்ல இருப்பதாகவும், விஜயகாந்த் மீண்டும் பழைய கெம்பீரத்துடன் திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…