இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக அனைத்து பகுதியிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
மதுரையில் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று நடந்த தேசிய ஒருமைப்பாட்டு முகாமில் பஞ்சாப் மாநில கலைஞர்களுடன் நடனமாடி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அசத்தினார்.
இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இன்று சென்னை மெரினா காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேறினார். மேலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அமைச்சர்கள் கலந்துகொண்டு குடியரசு தினத்தை கொண்டாடப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், மதுரையில் குடியரசு தினத்தையொட்டி இன்று 16 மாநில கலைஞர்கள் பங்கேற்ற தேசிய ஒருமைப்பாட்டு முகாம் ரயில்வே சந்திப்பு அருகே நடைபெற்றது.
unknown nodeஇந்நிலையில், நிகழ்ச்சியை வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் கலைஞர்கள் தங்கள் மாநில பண்பாட்டை விளக்கும் வகையில் நடனம் ஆடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். அந்த வகையில் பஞ்சாப் மாநில கலைஞர்கள் நடனமாடி கொண்டிருந்தபோது விழா ஏற்பாட்டாளர்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் கலைஞர்களுடன் அசத்தலாக நடனமாடினார். பின்னர்அமைச்சரின் நடனத்துக்கு பார்வையாளர் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.