பொதுப் போக்குவரத்து வாகனங்களின் அனைத்து ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட கடிதங்களில் மேற்குவங்கம் மற்றும் டெல்லி மாநிலங்களில் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிப்பு செய்து அவகாசம் வழங்கியது போல தமிழகத்திலும் பொது போக்குவரத்து வாகனங்களின் ஆவணங்கள் செயல்படும் கால அவகாசத்தை 31 டிசம்பர் வரை நீட்டிப்பு செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையினை ஏற்று கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டும், பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதியும் அனைத்து ஆவணங்களின் தகுதி சான்று புதுப்பித்தல், அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு செல்லுபடியாகும் கால அளவினை டிசம்பர் 31-ம் தேதி வரை கால நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுவே கடைசி நீட்டிப்பாக இருக்கும் என நிபந்தனையுடன் குறிப்பிட்டு தமிழக அரசு அவகாசம் வழங்கியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…