தந்தை, மகன் கொலை வழக்கு – காவலர்கள் 2 பேரின் மனு தள்ளுபடி

தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான காவலர்கள் முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இதனை தொடர்ந்து செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்நிலையில் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் காவலர்கள் முத்துராஜ், தாமஸ் பிரான்ஸிஸ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.அப்பொழுது, ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள் என்று சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.இதனையடுத்து காவலர்கள் முத்துராஜ், தாமஸ் பிரான்ஸிஸ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025