விருதுநகர் மாவட்டம் கோட்டூர் அருகே பொம்மையாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. குமார் என்பவருக்கு சொந்தமான செந்தூர் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் பிரான்சி ரக பட்டாசு தயாரித்து கொண்டியிருந்தபோது எதிர்பாராத விதமாக வெடி மருந்தில் உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வெடி விபத்து தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு ஆலையில் தொடர்ந்து வெடி வெடித்து சிதறி கொண்டிருப்பதால், பட்டாசு ஆலை வளாகத்திற்கு செல்ல முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டாசு ஆலைக்கு வெளியில் இருந்தே தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து வருகின்றனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு அறை தரைமட்டமாகி உள்ளது.
இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்ட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் இது 5வது வெடிவிபத்து என்பதாகும். அதேபோல் தொடர் விபத்துகள் காரணமாக இரண்டு மாதங்களில் மட்டும் 14 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…