பட்டாசு ஆலை வெடி விபத்து – 8 பேர் கொண்ட குழுவை அமைத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்.!

The National Green Tribunal has set up an eight-member panel to investigate the explosion at the firecracker factory.

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தை விசாரிக்க 8 பேர் கொண்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சன்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தை விசாரிக்க 8 பேர் கொண்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது தேசிய பசுமை தீர்ப்பாயம். தமிழக அரசு, மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர், பட்டாசு ஆலை உரிமையாளர் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.