தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.ஒரு சில மாவட்டங்களில் இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில் அநேக இடங்களில் வேட்பாளர்களின் வெற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதிமுக முன்னாள் எம்.பி .அன்வர் ராஜா ஆவார்.இவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்.உள்ளாட்சித் தேர்தலில் இவரது மகள் ராவியத்துல் அதரியா ராமநாதபுரம் மண்டபம் ஒன்றியம் 2 வது வார்டில் போட்டியிட்டார்.ஆனால் இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்பு லட்சுமியிடம் 1343 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார். அன்வர் ராஜாவின் மகனும் தோல்வி அடைந்தார்.மண்டபம் ஒன்றியம் 16- வது வார்டில் போட்டியிட்ட அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியை திமுக வேட்பாளர் தவ்பீக் அலி தோற்கடித்தார்.
இந்நிலையில் இது குறித்து அதிமுக முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா கூறுகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்ததால் அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்களிக்கவில்லை. தேசிய குடியுரிமை பதிவேடு நாடு முழுவதும் அமலாகும் என்ற அச்சம் சிறுபான்மையினர் மத்தியில் நிலவுகிறது.இதனால் அதிமுக தனது முடிவில் பரிசீலனை செய்யும் என்று நம்புவதாக கூறினார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…