டெல்லியில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார்.
கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர், சமீபத்தில் திடீரென அவரது பணியில் இருந்து விலகி, சில மாதங்களுக்கு விவசாயத்தில் களமிறங்க உள்ளேன் என தெரிவித்தார். இதனிடையே, ரஜினிகாந்துக்கு ஆதரவாக அவர் பேசிவந்ததால் ரஜினி தொடங்க உள்ள கட்சியில் அவர் இணைய உள்ளதாக கூறப்பட்டது.
இனையடுத்து, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை, டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் இன்று காலை 11 மணிக்கு பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், டெல்லியில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். அப்போது, தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் இருந்தனர். பாரதிய ஜனதா கட்சியை மேலும் வலுப்படுத்த என்னாலான முயற்ச்சியை செய்வேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை : அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. தேர்தலுக்கான வேலைகளில் இரண்டு…
சென்னை : மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை ஜூலை 15-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்…
டெல்லி : ஏமனில் கடந்த 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்டு கேரளாவைச்…
மதுரை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாடு…
கர்நாடகா : இனிமேல் கர்நாடகாவில் வெளியாகும் அனைத்து மொழி படங்களுக்கு டிக்கெட் விலை ஒவ்வொரு திரையரங்குகளில் ரூ.200 ஆக இருக்கவேண்டும்…
டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…